Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையில் புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னையில் மினி பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதன் காரணமாக, மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இருக்கின்ற சுமார் 210 மினி பேருந்துகளில் 66 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், அப்போது தெரிவிக்கப்பட்டது.

தலைநகர் சென்னையில் மினி பேருந்துகளில் பயணிகளின் பயன்பாடு குறைந்து நிதி இழப்பு உண்டானதால் மீதம் இருக்கின்ற 144 மினி பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டது. தற்சமயம் இந்த மினி பேருந்துகளில் சிறந்த முறையில் பயன்படுத்திட மற்ற பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தரவிடப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஆலந்தூர் விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர், மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

Exit mobile version