இந்தியாவில் உள்ள சில முக்கிய வங்கிகள் தங்களுடைய விதிமுறைகள் புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இந்த மாற்றங்களின் மூலம் வங்கி கணக்குகளில் பராமரிக்கப்பட்டு வரும் மினிமம் பேலன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ATM பரிவர்த்தனைகளிலும் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
State Bank of India :-
✓ ஸ்டேட் பேங்க் உடைய மினிமம் பேலன்ஸ் ஆனது 3000 ரூபாயிலிருந்து தற்பொழுது 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
✓ இதேபோன்று ATM பரிவர்த்தனைகளில் மாதத்தின் முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதன் பின் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. தற்பொழுது அது 25 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Canara Bank :-
✓ வங்கி பயனர்களின் மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
✓ இந்த வங்கியும் தன்னுடைய ATM சேவை கட்டணத்தை 25 ரூபாயாக உயர்த்தி உள்ளது.
Punjab National Bank :-
✓ வங்கி பாயனர்களுக்கான மினிமம் பேலன்ஸ் 1000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கின்றது.
✓ தன்னுடைய ATM சேவை கட்டணத்தை 25 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
குறிப்பு :-
இலவச ATM வரம்பை தற்பொழுது 5 முறை என இந்த வங்கிகள் உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கிகளில் தங்களுடைய கணக்குகளை பராமரிப்பவர்கள் புதிய விதிமுறைகளை அறிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என இந்த வங்கிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.