Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 உள்ளிட்ட வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகலில் வெளியிட உள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாட அளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது.

முன்னதாக அடுத்த கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version