Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நிச்சயமாக நடைபெறும்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

சென்னை நடுகுப்பத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, இல்லம் தேடி கல்வித்திட்டம் 40 ஆயிரம் மையங்களில் முதல் கட்டமாக ஆரம்பித்து நடந்துவருகிறது. தற்சமயம் இரண்டாவது கட்டமாக 34 ஆயிரம் மையங்களில் தொடங்கப்பட இருக்கிறது, அந்த விதத்தில் ஒட்டு மொத்தமாக 80 ஆயிரம் மையங்களிலும் தேடிக் கல்வித் திட்டம் செயல்படும் என்று கூறியிருக்கிறார்.

நம் திட்டத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் முகங்கள் தேவை இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலமாக இதுவரையில் 11 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள் என கூறியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில், 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத் துறை உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் முடித்து வைக்கப்படும். பொதுத்தேர்வு என்பது மிகவும் அவசியம் சென்ற வருடம் பொதுத் தேர்வு நடத்த இயலாமல் போனது ஆனால் இந்த வருடம் அதே போல நடத்த முடியாமல் இருக்கும் சூழ்நிலை நிச்சயமாக ஏற்படாது என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

ஏனென்றால் பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மிக விரைவில் முடித்து வைக்கப்படும். அவர்களுக்கான வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. அதற்கான வாய்ப்பை முதலமைச்சரின் அனுமதி பெற்று ஏற்படுத்தித் தருவோம் என்று கூறியிருக்கிறார். அந்த விதத்தில் பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்று அவர் உறுதியாக கூறியிருக்கிறார்.

Exit mobile version