சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் !!

0
177

 

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ்…

 

திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரு மருத்துமனைக்கு சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

 

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்.

 

மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ‘அஜீரணக் கேளாறு’, ‘வாயுத் தொல்லை’ காரணமாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பெங்களூருவில் உள்ள நாராயணா இருதாலயா மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெங்களூரு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சிகிச்சை முடிந்து தற்பொழுது வீடு திரும்பியுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சிகிச்சை முடிந்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.