விக்கிரவாண்டியில் உண்மையான வெற்றி நாயகன் சி.வி சண்முகம்

0
222
ADMK CV Shanmugam as Deputy Chief Minister-News4 Tamil Latest Online Tamil News Today

விக்கிரவாண்டியில் உண்மையான வெற்றி நாயகன் சி.வி சண்முகம்

தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணியே வென்றது இருப்பினும் இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி விக்கிரவாண்டி தான்.

அதற்கு காரணம் விக்கிரவாண்டியில் மிகப்பெரிய சமூகமாக வன்னியர் சமூகம் இருந்து வருவது தான் . அந்த சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக ” நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் வன்னியர்களுக்கு MBC பிரிவில் உள் ஒதுக்கீடு தருவோம் ” என அறிவித்தது. வன்னிய இளைஞர்களிடம் பெறும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு பெற்றது என்பது மறுப்பதற்கில்லை.

ஏற்கனவே பாராளுமன்ற பொது தேர்தலுக்கு பின் தனியாக நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலிலும் திமுக வென்ற நிலையில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு அறிவிப்பு வன்னியர்களின் கோட்டையான விக்கிரவாண்டியிலும் எதிரொலிக்கும் என்பதே பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கணிப்பாக இருந்தது. 2016ல் திமுக வென்ற தொகுதி என்பதும் கூடுதல் பலம்…

மேற்கண்டவை திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு சாதகமாகக் கருதப்பட்டாலும் மறுபுறம் அதிமுகவின் சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்தின் சமீபத்திய எழுச்சி அதற்கு சிம்ம சொப்பணமாகவே அமைந்தது . எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவி ஏற்றது முதல் சி.வி. சண்முகம் முழு சுதந்திரமாக செயல்பட்டு வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஏற்கனவே பல தலைமுறைகளாக இருந்து வரும் வன்னிய சமூகத்தின் கோரிக்கையான #வன்னியர்நலவாரியத்தை அமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அதில் அவர் வென்று காட்டியதும், கட்சியைக் கடந்து எல்லா தரப்பு வன்னியர்களிடத்தும் பாராட்டைப்பெற்றது. வன்னியர் சமூகத்தின் மாபெரும் அரசியல் தலைவரான மறைந்த தியாகி ராமசாமி படையாட்சியின் திருவுருவ படத்தை சட்டமன்றத்தில் திறந்ததும் அந்த சமூக மக்களிடையே சி.வி. சண்முகத்தின் இமேஜை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது..

ஏற்கனவே விக்கிரவாண்டி தொகுதி திமுகவின் வெற்றி தொகுதியாக இருந்தாலும், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் விழுப்புரம் தொகுதியை திமுக வென்றிருந்தாலும், விழுப்புரத்தை ஒத்த வேலூரிலும் கடைசியாக திமுக வென்றிருந்து திமுகவினரை முழு நம்பிக்கையில் வைத்திருந்தாலும் அமைச்சர் சி.வி சண்முகத்தின் மீது வன்னியர் சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையும், பாமகவுடன் மிக நெருக்கமாக அமைந்த கூட்டணியுமே விக்கிரவாண்டியில் அதிமுக 44,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெல்ல உதவி இருக்கிறது.

இந்த மாபெரும் வெற்றி மூலம் அதிமுகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக சி.வி. சண்முகம் உருவாக வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.