வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள் 

0
167
#image_title

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த திமுக அமைச்சர்கள்

வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை திமுக அமைச்சர் துரைமுருகன் மற்றும் கே.என் நேரு ஆய்வு செய்தனர்.

தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் காலம் தாழ்த்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே? – ஆமாம் இன்னும் ஆய்வில் தான் இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலாவது மண்டலம் காந்தி நகர் 9வது தெருவில் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே என் நேரு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் கட்டி முடிக்க ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் கே.என் நேரு அறிவுறுத்தினார்.

அப்போது, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் ஆய்வு செய்வதாக கூறி அரசு காலம் தாழ்த்துவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே என கேட்டதற்கு,’ஆமாம், இன்னும் ஆய்வில் தான் இருக்கிறது,’ என பதில் அளித்தார்.

மேலும்,நந்தன் கால்வாய் திட்டம் சீரமைப்பு குறித்து கேட்டதற்கு,’நிதி ஒதுக்கியிருக்கிறோம்,’ என்றார். முன்னதாக கல்புதூர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.