Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!!

#image_title

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார்.

அப்போது பேசிய அவர், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில், Handlooms and Handicrafts Museum அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், சர்வதேச தரத்தில், “Design and Incubation Centre” சென்னையில், எழும்பூர் கோ ஆப்டெக்ஸ் கைத்தறி வளாகத்தில், ரூபாய் 30 கோடி செலவில், அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டின், பாரம்பரிய (Traditional) கைத்தறி இரகங்கள் மற்றும்
புவிசார் குறியீடு (Geographical Indication) பெற்ற கைத்தறி இரகங்களை, அடுத்த தலைமுறையினர் தெரிந்துக் கொள்ளும் வகையில், ரூபாய் 1 கோடி செலவில் மின்னணு பதிவு (Digitization) செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் உள்ள 5,000 விசைத்தறிகளில், Electronic Panel Board நிறுவ அரசு மானியமாக ரூபாய் 6 கோடி விடுவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version