Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சர் வெளியிட்ட நற்செய்தி! விவசாயிகள் மகிழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் காணொளி மூலமாக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்களுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கூட்டத்தில் விவசாய கடன்களை விரைவாக கொடுக்கவேண்டும் என்று கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பெரியசாமி அறிவுரை கூறியிருக்கிறார்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகள் விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்த கடன்களை விரைவாக வழங்க வேண்டும் விவசாயிகள் பயிர்க் கடன் கேட்டு மனுக்கள் கொடுத்தால் அந்த மனுக்கள் மீது தாமதமில்லாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாய பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான உரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறேன் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்து இருக்கிறார்.

அதோடு தற்போது விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருவதால் இயற்கை உரத்தை கொள்முதல் செய்து வழங்க வேண்டும் அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விரைவாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறியதாக தெரிவித்திருக்கிறார் அமைச்சர். அத்துடன் தமிழ்நாட்டில் சிறு வணிக கடன்கள் அதிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை திரும்ப செலுத்தும் சிறுவணிகர்களுக்கு கூடுதலாக கடன் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அமைச்சர் கூறினார்.

அத்துடன் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மீது எடை குறையாமல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். கூட்டுறவு பண்டக சாலைகளில் வெளிச்சந்தை விடவும் மிக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கி இருப்பதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.aa

Exit mobile version