தமிழகத்தின் நலனுக்காக பொன்.ராதாகிருஷ்ணன் செய்தது என்ன..? அமைச்சர் கேள்வி!
மத்தியில் பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் வளர்ச்சிக்காக எத்தனை நல்ல திட்டங்களை கொண்டு வந்தார் என தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாகிவிட்டது என்று கூறிய பாஜகவின் முன்னாள் அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தனது கட்சியில் எந்த பதவியும் கிடைக்காத காரணத்தாலும், வெறுப்பினாலும் தமிழக அரசை குற்றம் சாட்டுகிறார் என்று கூறினார்.
தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பில் சிறந்து விளங்குவதால் மத்திய அரசு விருதுகள் அளித்துள்ளது என்றும், தேவையற்ற குற்றச்சாட்டை எங்கள் மீது கூற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
நடுவண் அரசால் தமிழ்நாடு பாராட்டப்படும் சூழலில் பொய்யான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் நடுவண் அரசை எதிர்க்கிறாரா..? என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.