தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல் நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலே கொரோனா தொற்றிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் பாதிப்படைந்து வருகிறார்கள். அதிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார்கள். இப்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் தொற்றின் அளவு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் பிரிட்டனில் ஆரம்பித்து இருக்கின்ற உருமாறிய கொரோனாவும், தமிழ்நாட்டில் இப்போது பரவ ஆரம்பித்திருக்கிறது.
இந்த நிலையிலே, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சில தினங்களுக்கு முன்பு திருவாரூரில் நடந்த பொங்கல் பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டார் அதன் பிறகு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றார் .அவருடைய சிடி ஸ்கேன் இயல்பாக இருக்கின்றது. அமைச்சருக்கு தொற்று தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
சாதாரண அறை காற்றிலே கிடைக்கும் ஆக்சிசன் அளவே அவருக்குப் போதுமானதாக இருப்பதாக சொல்லப்படுகிறது .வேறு எந்தவிதமான ஆக்சிசன் துணையும் அவருக்கு தேவைப்படவில்லை. அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.