தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, இந்த தடுப்பூசி முகாம் கடந்த 12ஆம் தேதி முதல் கட்டமாகவும் மற்றும் 19ஆம் தேதி இரண்டாவது கட்டமாகவும், அதோடு 26ஆம் தேதி 3-வது கட்டமாக நடத்தப்பட்டனர் ஆனாலும் இந்த முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகவே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில், இன்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நாளை மறுதினம் அதாவது அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் இதுவரையில் 24.98 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும், தெரிவித்து இருக்கிறார். 20 லட்சம் தடுப்பூசி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பு ஊசி செலுத்தப்படும், தடுப்பூசி முகாமின்போது ப நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றேன். அதேபோல இந்த வாரம் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, போன்ற மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றேன். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் ஆய்வு மேற்கொள்வார் என்று கூறியிருக்கிறார்.
தடுப்பூசி முகாம் களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடந்த சமயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பல இடங்களில் நேரடியாக சென்று ஆய்வுகளை முன்னெடுத்தார். பொதுமக்களிடையே தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை அவர் உண்டாக்கினார். அந்த நேரத்தில் தடுப்பூசி முகாம்கள் மிக சிறப்பான முறையில் நடந்து வருகிறது என கூறியிருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியம்.
நான்காவது தடுப்பூசி முகாம் நடைபெறுவதற்கு குறைந்த கால இடைவெளியே இருப்பதால் ஊடகவியலாளர்களும், பத்திரிகையாளர்களும், இந்த செய்தியை இப்போது மக்களிடையே கொண்டு சேர்க்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம். ஜனவரி மாதம் தடுப்பது செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டது. செப்டெம்பர் மாதத்தில் தான் அதிகப்படியான தடுப்பூசிகள் பொது மக்களை சென்றடைந்து இருக்கின்றன. அதற்கு காரணம் தடுப்பூசி முகாம்கள் தான் என கூறியிருக்கிறார் அமைச்சர்.
இதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார். ஆனால் தற்போது நாளை மறுநாள் தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடைபெறும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.