அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசிடம் கோரிக்கை! மாணவர்களின் நலன் கருதி திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் வருடம் வருடம் நீட் தேர்வு நடந்து வருகிறது.இந்த நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தமிழகத்தில் உள்ளவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.அதுமட்டுமின்றி மக்களும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கூறிவருகின்றனர்.ஏனென்றால் நமது தமிழகத்தின் குடும்பங்களின் பொருளாதார நிலையும்,மாணவர்களின் உழைப்ப்பும் வீணாகி விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தில் செயல்படுகின்றனர்.ஆனால்,மத்திய அரசோ நீட் தேர்வை ரத்து செய்வது போல தெரியவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிக்கை வெளியிட்டனர்.ஆனால் பலமுறை திமுக மத்திய அரசிடம் கோரிக்கை மனுவை வைத்தும் மத்திய அரசு அதனை சிறிதளவும கண்டுக்கொள்ள வில்லை.மேற்கொண்டு மத்திய அரசு நீட் தேர்வுக்கான தேதியையும் கூறியுள்ளது.இவ்வாறு மத்திய அரசு கூறியதும்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை கொடுத்து விட்டு தவித்துக்கொண்டிருக்கிறது என்பது போலும் மற்றும் மாணவர்களின் மருத்துவ கனவு தற்போது கேள்விக்குறியாக உள்ளது என்றும் கூறினார்.
அதனையடுத்து பல தரப்பிலிருந்து திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலினிடம் கேள்வி நீட் தரவு பற்றி கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் கூறுவதிலிருந்து நழுவிய நிலையிலேயே இருந்தார்.அதனையடுத்து முதல்வர் கூறியதாவது,இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான தேதி தற்போது வெளியாகியுள்ளதால் நீட் தேர்வு விளக்கு பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை அதற்குள் முடிக்க முடியாத சூழல் தற்போது உள்ளது.இந்த ஆண்டு நீட் தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் தற்போது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது வருத்தத்திற்ககுரியது என கூறியுள்ளார்.
இவரை அடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் பிரதமரை காண சென்ற போதும் நீட்தேர்வை ரத்து செய்யும் படி கோரிக்கை விடுத்தார்,அவரை அடுத்து தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.இவ்வாறு திமுக உறுப்பினர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்குமாறு கேட்டு வருகின்றனர்.