Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விதிமுறைகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா?… அமைச்சரிடம் கேள்வி!

விதிமுறைகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா?… அமைச்சரிடம் கேள்வி!

அமைச்சர் மா சுப்ரமண்யன் நயன்தாராவின் குழந்தைகள் பெற்றுள்ளது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் மிகவும்  பிரமாண்டமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்களது திருமணத்தில் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதல் நம்மூர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அந்த தம்பதிகள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த குழந்தைகளை அவர்கள் வாடகைத் தாய் மூலமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்கள் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில் இந்த அறிவிப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்ததில் இருந்து  பல சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழ்ந்தை பெற்றுக்கொள்ள பல சட்டங்கள் உள்ளன. அதையெல்லாம் மீறிதான் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யனிடம் கேட்ட போது “அவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version