Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகும் திமுக அமைச்சர்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. இந்த நோய் தொற்று பரவும் வேகத்தை கண்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்திருந்தாலும் இந்த வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த தொற்றின் முதல் அலையின்போது அதிகபட்சமாக மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் தான் பொதுமக்களோடு பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்சமயம் இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலையில் பெரிய பெரிய ஜாம்பவான்களும் சிக்கி மடிகின்றன.

அரசியல்வாதிகளில் பெரிய பெரிய புள்ளிகளும் இந்த நோயில் அகப்பட்டு உயிரிழந்து விடுகிறார்கள். அப்படிப் பார்த்தோமானால் இந்த நோய்த்தொற்றின் முதல் அலையை விடவும் இரண்டாவது அலையில் மிக முக்கிய அந்தஸ்தில் உள்ளவர்களை தான் இந்த இரண்டாவது அலை தாக்குகிறது என்ற ஒரு கருத்தே தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 892 பேர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்திருக்கிறது.

ஆனால் இந்த நோய் தொற்று தமிழ்நாட்டில் இதுவரையில் கட்டுக்குள் வரவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. நேற்று ஒரே தினத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இதுவரையில் மொத்தமாக, ஒரு லட்சத்து 58 ஆயிரத்து இருக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னரே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கரன் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version