முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

0
120

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடலூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சம்பா பயிர் காப்பீடு தொடர்பான விளக்கத்தை கொடுத்தார்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக இந்த வருடத்திற்கான பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த செய்திக்குறிப்பு கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிர் ஈடுபட்டிருப்பதாக தொலைக்காட்சிகளிலும் மற்றும் செய்தித்தாள்களிலும் கருத்து வெளியானது. இது குறித்து கூடுதல் விவரம் தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2021 மற்றும் 2022 ஆம் வருடத்தில் இருமுறை பயிர் காப்பீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு கட்டண விகிதம் அதிக அளவில் குறிப்பிடப்பட்டு இருந்ததன் காரணமாக, அதனை ஏற்க முடியாமல் மாநில அரசு ரத்து செய்தது. விவசாயிகளின் நலனை கருத்தில் வைத்துக் கொண்டு 3வது முறையாக கடந்த மூன்றாம் தேதி அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை 80:20 பகிர்மான அடிப்படையில் இணை காப்பீட்டு திட்டமாக செயல்படுத்துவதற்கு உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து சென்ற 19ஆம் தேதி பயிர் அறிவிக்கை வெளியிடப்பட்டது பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பு குறுவை பருவத்தில் நெல் மற்றும் தட்டைப்பயிறு உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற எல்லா பயிர்களுக்கும் காப்பீடு செய்வதற்கான அறிவிக்கை செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வருகின்றது.

டெல்டா மாவட்ட பகுதிகளில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 4.9 லட்சம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் இதுவரையில் 54 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை முடிந்திருக்கிறது. குறுவை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றார்கள். அதோடு அனேக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குருவை நெற்பயிர்கள் முதிர்ச்சியான நிலையில், இருப்பதால் நடப்பு குறுவை பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்திட அறிவிப்பை வெளியிடும் சூழல் இயலவில்லை என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.

ஆனாலும் இயற்கை சீற்றங்கள் காரணமாக, குருவை நெற்பயிரில் ஏதாவது பாதிப்பு உண்டு ஆனால் அதற்கான நிவாரண தொகையை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக நெல் சாகுபடி மற்றும் நபரை கோடை பருவத்தில் நடப்பதால் இந்த பருவ நெற்பயிர்கள் உள்ளிட்டவற்றை பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய தமிழக அரசால் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆகவே சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுடைய மேற் பயிரினை காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறையுடன் இருக்கின்ற தமிழக அரசால் வேளாண்மை துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு 2020 மற்றும் 2021 ஆம் வருடம் சம்பா பருவத்தில் காப்பீடு செய்யப்பட்ட நெற்பயிர் உட்பட மற்ற பயிர்களுக்கு உரிய மாநில அரசின் காப்பீட்டு கட்டணமாக, 124892 கோடி ரூபாய் கடந்த 16 ஆம் தேதி அன்று விடுவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு எப்போதும் விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள அரசாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறியிருக்கின்றார்.