ஆயிரம் ரிங்கிட் அபராதம் கட்டிய அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர்

0
116

மலேசியாவில், தனிமைப்படுத்தும் உத்தரவை மீறிய தோட்டத் துறை, அத்தியாவசியப் பொருள் துறை அமைச்சர் முகமது கைருதீன் அமான் ரஸாலி மீது காவல்துறை விசாரணை நடந்து வருவதாக, சுகாதாரத்துறைத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். கடந்த மாதம், துருக்கியிலிருந்து திரும்பிய அவர் தனிமைப்படுத்தும் கட்டாய உத்தரவை மீறியதால் அவருக்கு 1,000 ரிங்கிட் (330 வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்டிருக்கக் கூடிய ஆக அதிகபட்சத் தண்டனை அவ்வளவுதானா என்று பொதுமக்கள் பலர் சமூக ஊடகங்களில் வினா எழுப்பிவருகின்றனர். தனிமைப்படுத்தும் உத்தரவை மீறுவோருக்கான சட்டத்தில், அந்த அபராதமே ஆக அதிகமானது என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். ஆனாலும், மலேசியக் காவல்துறை அதன் தொடர்பிலான புகார்களை விசாரித்து வருவதாக அவர் கூறினார்.