தங்க காசுகளை அள்ளி இறைச்ச அமைச்சர்! இது எங்கே, எப்போது நடந்தது?
பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பை தொடர்ந்து மக்கள் விரும்பி கொண்டாடுவது ஜல்லிக்கட்டு போட்டி. பொதுவாக பொங்கல் பண்டிகை தினத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
அதிலும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ் பெற்றது. இதன் காரணமாகவே இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டினரும் வருகை தருவார்கள். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகவும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி திகழ்கிறது.
அந்த வகையில் தை பொங்கலான இன்று அவனியாபுரத்திலும், மாட்டு பொங்கல் தினத்தன்று (நாளை) பாலமேட்டிலும், நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து ஞாயிற்று கிழமைக்கு பதிலாக அதற்கு அடுத்த நாளான திங்கள் கிழமை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று அவனியாபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்ளூரை சேர்ந்த 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இன்று காலை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மேலும் இதுவரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மட்டுமே சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் முதன்முறையாக கார் ஒன்றை பரிசாக கொடுக்க வருமானவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மைக்கில் பேசிய அந்த ஜல்லிக்கட்டு போட்டியின் வர்ணனையாளர் அண்ணே போன வருசமே தங்க காசுகளை அள்ளி இறைச்சாறு, இந்த வருஷம் இன்னும் நிறைய செய்வாரு என அந்த போட்டியின் வர்ணனையின் போது பேசினார்.