Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாட்டில் 100 சதவீதத்தை நெருங்கும் நோய் எதிர்ப்பு சக்தி! அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவு மருத்துவமனை கட்டமைப்பு மற்றும் வசதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவமனையின் தலைமை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 4ம் கட்ட குருதிசார் ஆய்வு முடிவை வெளியிட்ட அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நோய்த்தொற்று பாதிப்புகளில் இருப்பவர்களில் 70% பேர் பலியாகிறார்கள்.

தமிழ்நாட்டில் 1,10, 20,196 பேர், 2வது தவணை தடுப்பூசி செலுத்தாமலிருக்கிறார்கள். அவர்களை இலக்காகக் கொண்டு தான் வாரம் தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் 4,99,408 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.

அதேபோல 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 26,92,917 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 7,40,383 சிறுவர்களுக்கு 2வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 9,71,66,368 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மிக விரைவில் தமிழ்நாட்டில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குருதிசார் ஆய்வின் 4ம் கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

இதுவரையில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 70% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில் 4ம் கட்ட ஆய்வில் 10 வயதிற்கு மேற்பட்ட 87% நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வு 1706 பேர் அடங்கிய 30 குழுக்கள் மூலமாக 32,245 கிராம மற்றும் நகர்ப்புற மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளியான முடிவுகளாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 90%மாகவும் தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 69 சதவீதமாகவும், இருக்கிறது.

நோய்யெதிர்ப்பு சக்தி அதிகபட்சமாக திருவாரூரில் 93 சதவீதம் பேருக்கும், தென்காசியில் 92 சதவீதம் பேருக்கும், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர், உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தலா 91 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version