Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!!

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!!

இந்தியாவில் எம்எல்ஏ என்பது சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின்னர் அவர்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகி ஆட்சி அமைக்கின்றனர்.

இந்தியாவில் MP என்பது பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் யூனியன் அரசாங்கத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் பிரதிநிதிகளாக அறியப்படுகிறார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருவரும் எம்.பி. அல்லது பார்லிமென்ட் உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

எம் எல் ஏ என்பது சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தனி தனியாக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின் ஆண்டு சம்பளம் 1.5 லட்சம். மேலும் இவர்களுக்கு தனித்தனியாக அவர்களின் தொகுதி மேம்பாட்டிற்காக ஒரு ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாய் வழங்கப்படும்.  இது மட்டும் இல்லாமல் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிப் பிறகு ஓய்வூதியம் என்று மாதம் 25 ஆயிரம் பென்ஷன் ஆக வழங்கப்படுகிறது.  இவர்கள் மக்கள் பிரதிநிதி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.  இவர் இறந்த பின் எம்எல்ஏ குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு தருகிறது.  அதன்படி இந்திய குடியுரிமை உள்ள எவரும், சட்டமன்றத் தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி பெறலாம். அவருக்கு வயது 25 திற்கும் மேல் இருக்க வேண்டும்.இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்டமன்றங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் மாநில நிர்வாகத்திற்கு அம்மாநிலத்தின் சட்டமன்றமே முதன்மைக் காரணியாக உள்ளன.

அமைச்சர்கள் அரசு பிரதிநிதியாக உள்ளார்கள். இவர்கள் முதலில் எம்எல்ஏ- க்களாக இருந்து அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இவர்களுக்கு கூடுதலாக மக்கள் பொறுப்பு சட்டசபையில் கேள்வி எழுப்புதல் புதிய அறிவிப்பை வெளியிடுதல் போன்ற பல உரிமைகள் உண்டு. இவர்களை 234 தொகுதியில் உள்ள எம்எல்ஏ வில் யார் சிறந்தவர் மக்களிடையே செல்வாக்கு நிறைந்தவர், நேர்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 43 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். உதாரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர், சுற்றுலா துறை அமைச்சர், வணிகத்துறை அமைச்சர் போன்ற இது போன்ற பல அமைச்சர்கள் உள்ளார்கள். சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளுடன் இணைந்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு புதிதாக ஒரு குழுவை அமைக்கின்றனர். இந்தக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்படுபவர் முதலமைச்சராகவும், அவரது பரிந்துரைப்படி பிற துறைகளுக்கான அமைச்சர்களும் பொறுப்பேற்பார்கள். ஒரு அமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக செயல்படலாம். ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராக செயல்பட முடியாது.

Exit mobile version