ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

0
166

சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது.

அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் ஓசி என்று அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது அமைச்சர் துரைமுருகன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும் போது பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னதை சீக்கிரம் நிறைவேற்றி விடுவோம். சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அம்மாவுக்கும், 1000 பொண்ணுக்கும் 1000 என்று 2000 ரூபாய் கொடுக்கும் ஒரே ஆட்சி இந்த ஆட்சி தான் என்றும் மற்றொரு அமைச்சர் பொன்முடி அவர்கள் ஓசி,ஓசி பஸ்ஸில் போறீங்க.. என பெண்களை கிண்டல் செய்தும் ஏளனமாக பேசியுள்ளார்கள். அதோடு இலவச பேருந்து செல்லும் பெண்களை மரியாதை குறைவாக நடத்துனர்கள் பேசும் வீடியோ காட்சிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது ஏதோ திமுகவைச் சார்ந்தவர்கள் அரும்பாடு பட்டு வியர்வை சிந்தி உழைத்து மக்களுக்கு பணம் கொடுப்பதை போல இந்த அரசியல் அனுபவம் மிக்க அமைச்சர்கள் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். உண்மையிலேயே தமிழ் பெண்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் அரசே மதுவை விற்கும் அவலத்தை நிறுத்த வேண்டும்.

திமுகவின் மகளிர் அணி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் மதுவின் கொடுமையால் தமிழகத்தில் தான் இளம் விதவைகள் அதிக அளவில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தது திமுகவினரின் செவிகளுக்கு சென்று சேரவில்லையா? என்று கேள்வி எழுப்புயுள்ளார்.

தமிழக அரசின் வருவாயில் பெரும் சதவீதம் மதுவை நம்பியே இருக்கிறது என்பதை யாராவது மறுத்து பேச முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெண்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பதாக தெரிவிக்கும் தமிழக அரசு தரமற்ற மதுவின் கொடுமையால் அதே பெண்களின் குடும்பத்தில் தந்தை அல்லது கணவர் சகோதரர்கள் உள்ளிட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பணியாற்ற முடியாமல் வருவாய் இழந்து வட்டிக்கு கடன் வாங்கி வறுமை நிலைக்கு சென்று கொண்டிருக்கின்ற சோகத்தை திராவிட முன்னேற்றக் கழகம் உணர்ந்திருந்தால் மூத்த அமைச்சர்கள் இப்படி பேசுவதற்கு துணிந்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டாஸ்மாக் கடைகளை அதிகரிப்பது, பார்களை அதிகரிப்பது மேலும் பல்வேறு மதுக்கூடங்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது என்று அந்த தொழிலை மேலும் விரிவுபடுத்த திமுக அரசு முனைந்து வருகிறது என்பது கண்கூடாக தெரிகிறது என தெரிவித்துள்ளார் நாராயணன் திருப்பதி.

சென்னையில் நடக்கும் சாலை பணிகள் மழை நீர் வடிகால் பணிகள் உட்பட எல்லா பணிகளிலும் வெளிமாநில தொழிலாளர்களை ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்கள் படித்து பட்டதாரிகளாகி, செல்வந்தர்களாகி விட்டார்கள்.

ஆகவே தான் இந்த பணிகளுக்கு செல்வதில்லை என்ற வாதத்தை ஆளும் கட்சியினர் முன்வைத்தார்கள் என்றால் செல்வந்தர்களுக்கு ஏன் 1000 ரூபாய் கொடுக்க வேண்டும்?

எதற்காக இலவசங்கள்? எதற்காக கடன் தள்ளுபடிகள்? என்பதே நம்முடைய கேள்வியாக இருக்கிறது.

மதுவால் பெண்கள் படும் துன்பத்தை சொல்லி மாளாது என்பதை நன்கு தெரிந்திருந்தும் மது விற்பனையை அதிகரிக்க திட்டமிடுவது தமிழர்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம்.

இவை அனைத்திற்கும் மேலாக மூத்த அமைச்சர்கள் ஓசி, ஓசி என்றும், சில்லறை மாற்றி கொடுக்கிறோம் என்றும் மக்களை ஏளனம் செய்வது மிகப்பெரிய கொடுமை என்று நாராயணன் திருப்பதி தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.