Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

#image_title

“பதில் உரையை நன்றாக கவனிக்க வேண்டும்” இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!

சட்டசபையில் தனது எந்த உரைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

சட்டசபை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று சட்டசபையில் விவாதங்கள் முடிவுற்ற நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், சட்டசபையில் தான் கேட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சரின் உரையில் பதில் இல்லை என குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமி மழை வெள்ள பாதிப்புகள், மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது மற்றும் தேர்தல் அறிக்கையை குறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா, பொருளாதார வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக சட்ட அமைச்சர் ரகுபதி, “முதல்வரின் பதிலையை கவனித்திருந்தால் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்தி எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிந்திருக்கும். சென்னை தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் டிசம்பரில் ஏற்பட்டது என்றும், ஒரு மாதத்திற்குள்ளாகவே செலவு விவரங்களை எப்படி பெற முடியும்” என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாக 14வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. காவிரி பிரச்சனையின்போது கூட அதிமுக குரல் கொடுக்காத நிலையில் திமுக எம்.பி கள் குரல் கொடுத்து வந்தனர். நிர்வாகம் தொடர்பான அறிக்கைகளை பொது பார்வைக்கு வைக்க வேண்டியதில்லை என்பது முதலமைச்சராக இருந்தவருக்கு தெரியாதா? நீட் தேர்வு குறித்த ஏ.கே ராஜன் போன்ற குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதியில் சொல்லாத பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது எனக் கூறினார்.

Exit mobile version