திருப்பதி கங்கையம்மனுக்கு அமைச்சர் ரோஜா கணவர் செல்வமணியுடன் பட்டு வஸ்திர சமர்ப்பணம். அன்னையர் தினத்தன்று தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அமைச்சர் ரோஜா பேட்டி.
திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழா அடுத்த புதன் அன்று நிறைவடைய உள்ளது. திருவிழாவை முன்னிட்டு திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி துவங்கி பல்வேறு பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திர சமர்ப்பணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, அவருடைய கணவர் செல்வமணி ஆகியோர் இன்று கங்கை அமரனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து கோவிலில் வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் அன்னையர் தினத்தன்று தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சிறுவயதில் இருந்து இந்த திருவிழாவை பார்த்து மகிழ்ந்தது உண்டு. தற்போது தாயாருக்கு அமைச்சராக வந்து பட்டு வஸ்திரம் சமர்ப்பது சந்தோஷம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.