Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கல்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

Minister Sakkarapani-News4 Tamil Latest Political News in Tamil

Minister Sakkarapani-News4 Tamil Latest Political News in Tamil

குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கல்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

தற்போது பதவியேற்றுள்ள திமுக ஆட்சிக்கு வர முக்கியமாக அமைந்தது அக்கட்சி அளித்திருந்த கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளே.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து,பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு மற்றும் குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் குறித்து ஆளும் திமுக அரசு எந்த ஒரு நிலைப்பாடும் தெரிவிக்கவில்லை.

ஆனால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற மழுப்பலான பதிலையே முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை என அனைவரும் கூறி வருகின்றனர்.அதே நேரத்தில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கும் குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்குவது குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடல் வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க தக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இதற்காக கடலோர படைகளுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அடுத்து சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம் நடத்தி அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version