தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

0
151

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அவர் அறிவித்த தொகையை இரு தவணைகளாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மே மாதம் கடைசியிலிருந்து முதல் தவணை நிவாரண தொகை 2000 வழங்கப்பட்டு வருகிறது. நோய்தொற்று காலத்தில் வெளியூரில் சென்று தங்கி இருக்கின்றவர்கள் தங்களுடைய நியாயவிலை கடைகளில் 2000 ரூபாய் பெற இயலாத நிலை இருப்பதால் எந்த தேதியிலும் முதல் தவணை தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.

தற்சமயம் இரண்டாவது தவணை தொகையாக 2000 ரூபாய் இன்று முதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த தொகையுடன் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பையையும் இலவசமாக வழங்க இருக்கிறார்கள். இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது ஆகவே பொதுமக்கள் அவசரம் எதுவும் இல்லாமல் அவற்றை பெற்றுக் கொள்ளலாம். 15ஆம் தேதி முதல் இந்த மாதம் இறுதி வரையில் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.