Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

+2 பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு தாமதமாகவே விடைத்தாள் திருத்தும் பணி துவங்கப்பட்டது. சென்னை உட்பட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளின் விடைத்தாள்கள் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது.

வரும் ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பள்ளி கல்வித் துறை மற்றும் தேர்வு துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பொதுவாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே மாதத்தில் வெளியாவது வழக்கம். அதே போல் 10ம் வகுப்புக்கான முடிவுகள் மே இறுதி வாரத்திலோ, ஜூன் மாதத்திலோ வெளியாகும்.

இந்த ஆண்டு 12ம் வகுப்பை பொருத்த வரை விடை தாள் திருத்தும் பணியே தற்போது தான் நடைபெற்று வருகிறது, 10ம் வகுப்பு தேர்வே இன்னும் துவங்காத நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version