முன்னதாக அரசு போக்குவரத்து கழகத்தின் வேலை வாங்கிக் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் , சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சென்னை ஓமந்தூரார் பல் நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.4000 கோடி ஊழல் செய்து உள்ளதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சி.டி.ஆர் நிர்மல்குமார்மாநில இணை செயலாளர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் மனுவை அளித்துள்ளார். இந்த புகர்க்கு காரணம் 2021 முதல் 2023ம் ஆண்டுவரையில் 45,800 மின்மாற்றிகள் வாங்குவதற்க்கு, ரூ.1,182 கோடி மதிப்பில் 10 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இந்த டெண்டர் விதிமுறைகள் சரியாக பின்பற்றாமல் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு என இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இழப்புக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தது விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது.