Minister Senthil Balaji: முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்து இருக்கிறார் என்ற செய்தி முற்றிலும் பொய் என மறுத்து இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கடந்த சில நாட்களுக்கு முன் 25000 கோடி ஊழல் செய்து இருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் (சோலார் பேனல்) வழங்க 20 நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து இருக்கிறது என அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக மின் வாரியத்திற்கு தொடர்பு இருக்கிறது என தகவல் வெளியானது. மேலும் அந்த சமயம் முதல்வர் ஸ்டாலின் அதானியுடன் சந்தித்து இருந்தார். அதற்கான காரணத்தை கேட்டு அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக ராமதாஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து இருந்தார்கள். அது அப்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதில் மற்ற மாநிலங்களை போல ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் மட்டுமே தமிழக மின் வாரியம் சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டு இருக்கிறது.
வேறு எந்த ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றும். அதிமுக ஆட்சியில் நலிவடைந்த மின்சார வாரியம் தற்போது நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறது என தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்து ஒப்பந்தம் செய்து இருக்கிறார் என்பதை முற்றிலும் பொய்யான தகவல் என தெரிவித்து இருக்கிறார்.