Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களுடன் மாணவராய் அமர்ந்த அமைச்சர்! நெகிழ்ச்சியில் மழலைச் செல்வங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பள்ளிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிற்கின்ற வகுப்பறைகள் காணொளிக் காட்சியை வகுப்பறைகள் அணிவகுப்பை போன்றவைகளை அவர் ஆய்வு செய்தார் என்று சொல்லப்படுகிறது.

அதன்பிறகு மாணவர்களுடன் அவரும் மாணவராக தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்கள் படிப்பதை ரசித்துப் பார்த்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

அந்த சமயத்தில் அவரிடம் இந்தப் பள்ளியை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தார்கள் அதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, உத்தரமேரூர் அடுத்த நகர் கிராமத்தில் இருக்கின்ற அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வகத்தையும் அவர் திறந்து வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்த்தார் அப்போது மாணவ மாணவிகள் தங்களுடைய கண்டுபிடிப்புகளின் சிறப்பு அம்சங்கள் தொடர்பாக அமைச்சரிடம் விளக்கமளித்தார்கள்.

இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே நாள்தோறும் பள்ளிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மற்ற மாணவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சுழற்சிமுறை வகுப்புகள் அடிப்படையில் நான் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனை இப்போது நிறுத்த இயலாது நோய்த்தொற்று முழுவதும் குறைந்தவுடன் சுழற்சிமுறை வகுப்புகள் கைவிடப்படும் என கூறியிருக்கிறார்.

Exit mobile version