PMK-DMK: தேர்தல் நேரத்தில் மட்டும் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசுகிறது பாமக என அமைச்சர் சிவசங்கர் கண்டனம்.
நேற்று, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு பாமக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்புமணி வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு திமுக அரசு கொடுத்தால் நிபந்தனை இன்றியும், தேர்தலில் போட்டியிட தொகுதிகள் பெறாமலும் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என கூறி இருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அன்புமணியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து இருக்கிறார். அதில், தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் பாமக வன்னியர்கள் மீது பாசம் வருகிறது. வன்னியர்களின் இட ஒதுக்கீடு பற்றி பேசி போராட்டம் நடத்தி வருகிறது.வன்னியர்களின் இட ஒதுக்கீடுக்கு எதிராக இருக்கும் பாஜக கூட்டணியில் இருந்து பாமக விலகி இருக்கிறது.
தற்போது தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. அதை சாதகமாக பயன்படுத்தி பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க பாமக வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது என தனது கண்டதை தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் சிவசங்கர். மேலும், பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி கூட்டணி பேரம் பேசுகிறார் அன்புமணி என கூறி இருக்கிறார்.