அமைச்சர் மகன்னா பெரிய கொம்பா.?நேர்மையாக நடந்த பெண் போலீஸ் அதிரடி பணிமாற்றம்

0
167

குஜராத்தில் சுகாதாரத்துறை இணை அமைச்சரான குமார் கனானியின் மகன் பிரகாஷ், தனது நண்பர்களுடன் கடந்த புதன் கிழமை ஊரடங்கு விதிமுறையை மீறி காரில் பல மணி நேரம் ஊர் சுற்றியுள்ளனர். அப்போது வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த சுனிதா யாதவ் என்ற பெண் காவலர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

 

அப்போது அமைச்சரின் மகன், சட்டத்தை மீறி வந்த தவறை ஒப்புக் கொள்ளாமல் தனது தந்தைக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். வேகமாக சம்பவ இடத்திற்கு வந்த குமார் கனானி பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நான் நினைத்தால் உன்னை 24 மணி நேரமும் இங்கேயே நிற்க வைப்பேன் என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதைக்கேட்ட சுனிதா, நான் ஒன்றும் உங்களுக்கு அடிமையல்ல, உங்கள் மகன் மீது தவறு உள்ளது. ஊரடங்கை மீறி நடப்பது தவறு என்று கூறியுள்ளார். இதையடுத்து சுனிதா யாதவ் காவல் தலைமையகத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரகாஷ் கனானியும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டனர்.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவலர் சுனிதா யாதவிற்கு ஆதரவாகவும், அமைச்சர் மகன்னா பெரியா கொம்பா? சட்டத்தின் முன் எல்லோரும் சமம் ஊரடங்கு விதியை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் பலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.