முதல்வர் பயணம் செய்த பாதையில் விபத்து! இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி!

0
124

விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அந்த விதத்தில் இன்றைய தினம் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாகவும் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்கும் இதமாகவும் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தமிழகத்திற்கு வருகை தந்தார்.இந்தநிலையில் தாராபுரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் மாநில தலைவர் முருகனை ஆதரிக்கும் விதமாக பிரச்சாரம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் கோவையிலிருந்து கண்மாய்க்கு வரும் சமயத்தில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன.இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் வாகனத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் பயணம் செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக அமைச்சர் வேலுமணியின் கார் கடைசியாக வந்திருக்கிறது. அதேபோல சபாநாயகர் தனபால் கார் அதனை பின்தொடர்ந்து வந்திருக்கிறது.

இந்தநிலையில், தாராபுரம் அருகில் சூரிய நல்லூர் பகுதிக்கு வந்து சேர்ந்த சமயத்தில் இந்த விபத்து நடந்து இருக்கிறது. முன்னாள் வைத்த பாதுகாப்பு வாகனத்தின் டயர் திடீரென வெடித்தது. அதன் காரணமாக சாலையில் வாகனம் மோதி நின்றது இதனை தொடர்ந்து வந்த மூன்று வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி இருக்கிறது. இந்த விபத்து காரணமாக இரண்டு ஓட்டுநர்களும் காயமடைந்து இருக்கிறார்கள்.அதன் காரணமாக அந்த இரண்டு ஓட்டுனர்களும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் வேறு வாகனத்தில் வந்ததன் காரணமாக எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.முதல்வர் பயணம் மேற்கொண்ட பகுதியில் இவ்வாறு திடீரென்று விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.