முதல்வருக்கு ஐஸ் வைத்த தமிழக அமைச்சர்!

0
214

தமிழ்நாட்டில் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சியான திமுகவை தமிழக மக்கள் அனைவரும் புறக்கணித்து விடுவார்கள் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றத்தில் இன்றைய தினம் கேள்வி நேரம் நடந்தது. அந்த சமயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் அமைச்சர் தங்கமணி தன்னுடைய பதிலை தெரிவித்தார். அவர் உரையாற்றும் போதே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் ராசியான மனிதர் அதன் காரணமாக தான் தமிழகத்தில் மழை பெய்து வருகின்றது என்று தெரிவித்தார்.

அதோடு தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் புறக்கணித்து சென்ற அவர்களை எதிர் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் புறக்கணித்து விடுவார்கள். அது மட்டும் கிடையாது. நில ஆக்கிரமிப்பு கட்டப்பஞ்சாயத்து இன்று மக்களின் மனநிலைக்கு எதிர்மறையாக திமுகவும் அந்தக் கட்சியின் நிர்வாகிகளும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அதன் காரணமாக ,அவர்களின் குள்ள நரித்தனத்தை தெரிந்து கொண்ட தமிழக மக்கள் திமுகவினரை மொத்தமாக ஒதுக்கி விட்டார்கள். முன்பே 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்வியின் அனுபவத்தில் அவர்கள் திருந்தி இருப்பார்கள் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனாலும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டனர். ஆகவே எதிர்கட்சியான திமுக இப்போது மட்டுமல்ல எப்போதுமே எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கமுடியும். ஆட்சிக்கு வரவே இயலாத அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வர இயலாது. தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி எப்போதுமே இருப்பார் என்று தெரிவித்தார்.