Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புயலைவிட வேகமெடுத்த தமிழக அரசின் செயல்பாடு!

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு வெகுவாக தவிர்க்க பட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கின்றார்.

திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி நிவர் புயல் காரணமாக பல மின்கம்பங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றது சுமார் 108 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. புயல் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை 15 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கின்றது. முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் விவரங்கள் வெளியிடப்படும் பாதிக்கப்பட்ட இடங்களான கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் துண்டிக்கப்பட்டு இருந்த மின் வினியோகம் வழங்கப்பட்டிருக்கின்றது இனிவரும் காலங்களில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும்.நிவர் புயலை விட தமிழக அரசு வேகமாக செயல்பட்டது என்று தெரிவித்திருக்கின்றார்.

சென்ற 25 ஆம் தேதி நிவர் புயல் மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையில் கரையை கடந்தது சென்னைக்கு அருகே கரையை கடந்த இந்த புயல் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசின் துரிதமான நடவடிக்கை காரணமாக மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது இருக்கின்றது. முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்த காரணத்தால் ஒரே நாளிலேயே மக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த இந்த புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தடுப்பதற்காக தமிழக அரசுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version