தமிழ்நாட்டில் நோய் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதியில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்வதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்களை அழைத்து ஆலோசனை செய்தார். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் மே மாதம் இரண்டாம் தேதி முழு ஊரடங்கு விதிக்கப்படுமா என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்ளர்களுடனும் மருத்துவ நிபுனர்களுடனு தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் இந்த நோய்த்தொற்று பரவல் தற்போது வெகுவாக குறைந்து இருப்பதாக சொல்கிறார்கள். இருந்தாலும் இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போதும் மறுபடியும் இந்த நோய்த்தொற்று பரவல் அதிகரித்து அதன் மூலம் ஒவ்வொரு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு கடுமையாக்கப்படலாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் நோய்த்தொற்றுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு சிலர் உயிரை இழந்தும் இருக்கிறார்கள். பலர் குணமடைந்து வீடு திரும்பியும் வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், அதிமுகவின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதிக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நோய்னால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் வளர்மதி திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய புள்ளிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! அதிர்ச்சியில் ஆளும் தரப்பினர்!
