தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வது எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. அந்த விதத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
அவ்வாறு சில முக்கியமான சந்திப்புகள் நடைபெற்றால் அது மக்களிடையே பல்வேறு கருத்துக்களை எழுப்புகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் அண்மையில் மரணமடைந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.
அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதோடு மறைந்த வள்ளியம்மாள் புகைப்படத்திற்கு அஞ்சலியும் செலுத்திவிட்டு வந்தார்.
இந்த சூழ்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து உரையாடி இருக்கிறார். அந்த சமயத்தில் அவருடைய மாமியார் வள்ளியம்மாள் மறைவிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் கூறியிருக்கிறார். வள்ளியம்மாள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதாக அவர் தெரிவித்திருக்கிறார்.