Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சர்! நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பொதுமக்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் முதல் முறையாக நோய்தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, இந்தியா முழுவதும் அத்தியாவசிய கடைகள் ஆன காய்கறி கடைகள் மற்றும் தேனீர் கடைகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அதோடு அரசு மற்றும் தனியார் போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டது.

இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளானார்கள். ஆனால் மத்திய அரசு தரப்பில் பொதுமக்களின் நலனுக்காக இவை அனைத்தையும் நாட்டு மக்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று பதில் தெரிவித்தது.

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லை வேப்பூர், வயலூர், வயலப்பாடி, அகரம்சிகூர், வசிஸ்டபுரம், எம் கே நல்லூர், பி கே நல்லூர், அங்கனூர் சிவராமபுரம், சன்னாசிநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு அரியலூர் நகரத்திலிருந்து சன்னாசிநல்லூர் வரையில் அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்து 6:30 மணி அளவில் சன்னாசி நல்லூர் கிராமத்தில் இருந்து அரியலூர் வரை செல்லும் அப்படி செல்லும் இந்த பேருந்தால் காலையில் அலுவலகப் பணிகளுக்கு, செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், என்று நூற்றுக் கணக்கான மக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைந்து வந்தார்கள். வசிஸ்டபுரம். எம்கே நல்லூர், பிகே நல்லூர், உள்ளிட்ட கிராமங்களில் இருக்கின்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அகரம்சீகூருக்கு அருகில் இருக்கக்கூடிய கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருக்கின்ற அரசபள்ளிகளுக்கும், அதேபோன்று கல்லூரிகளுக்கும் செல்வதற்கு இந்த பேருந்து மிகவும் உபயோகமாக இருந்தது.

ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு நோய் தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் போடப்பட்ட முழு ஊரடங்கு இருக்கு பின்னர் நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்ததன் பலனாக ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியது. ஆனாலும் அரியலூரில் இருந்து சன்னாசிநல்லூர் வரை செல்லும் இந்த அரசு பேருந்து ஊரடங்கிற்கு பின் இயக்கப்படவில்லை. அப்படி இயக்கப்படாததன் காரணமாக, கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் என்று பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் வேப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் இதன் காரணமாக, வெகுவாக பாதிக்கப் பட்டார்கள்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த வசிஸ்டபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகம் சட்டசபை உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான திரு எஸ் எஸ் சிவசங்கர் அவர்களுக்கு பொதுமக்களும் மாணவ மாணவிகளும் வெகுவாக பாதிக்கப்படுவதால் உடனடியாக அரியலூரில் இருந்து சன்னாசிநல்லூர் வரை செல்லும் அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அனுப்பியது.

இந்த மனு கடந்த 3ம் தேதி தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், அந்த கோரிக்கை மனு மீது அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காரணத்தால், தற்சமயம் அரியலூரில் இருந்து சன்னாசிநல்லூர் வரை இயங்கும் அரசு பேருந்து இயங்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக, அலுவலக பணிகள் மற்றும் இதர பணிகளுக்கு செல்வோர் அதோடு மாணவ, மாணவிகள் என்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களுக்கு வசிஸ்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்டோரும் அதோடு வசிஸ்டபுரம், எம்கே நல்லூர், பிகே நல்லூர், உள்ளிட்ட கிராம பொதுமக்களும் நன்றியினை தெரிவித்து இருக்கிறார்கள்.

Exit mobile version