Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த துறையில் நேரடி அந்நிய முதலீடு சரிவு என தகவல் வெளியிட்ட அமைச்சர்!

Minister who released information on the decline in foreign direct investment in this sector!

Minister who released information on the decline in foreign direct investment in this sector!

இந்த துறையில் நேரடி அந்நிய முதலீடு சரிவு என தகவல் வெளியிட்ட அமைச்சர்!

நடப்பு நிதி ஆண்டில் 20 – 21 நாட்டின் உணவு பதப்படுத்தல் துறையின் மூலம் நேரடி அந்நிய முதலீடு 57 சதவீதம் சரிவடைந்து, 2 ஆயிரத்து 926 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் 19 – 20 ம் நிதிஆண்டில் 1734 கோடி ரூபாயாக இருந்ததாகவும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பிரகலாதன் பாட்டில் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விவசாயிகளின் வருவாயை உயர்த்த எண்ணி கடந்த 2016 ம் ஆண்டு பி.எம்.கே.எஸ்.ஒய் என்ற திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் உணவுபொருட்கள் பதப்படுத்துதல் துறைகள் ஊக்குவிக்கப்பட்டு, அதன்  வளர்ச்சிகளைக் கண்டு வருகின்றோம். உணவு பதப்படுத்தல் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ரிசர்வ் வங்கி அனுமதி இன்றி அன்னிய முதலீட்டில் தொழில் தொடங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் அந்நிய செலவாணி சட்டத்தின் கீழ் அந்நிய நேரடி முதலீடு பெரும் நிறுவனம் குறித்து ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுவரை 42 மெகா உணவு பூங்கா மற்றும் 353 குளிர்பாதன பிரிவுகள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version