Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுகவை கிண்டல் செய்த முக்கிய அமைச்சர்!

செம்பரம்பாக்கம் ஏரியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்றைய தினம் ஆய்வு செய்தார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் ,மாவட்டங்களில் கனமழையின் காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீரின் அளவு மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

22 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் நேற்று காலையில் நிலவரத்தின் அடிப்படையில் 21.33 அடியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், செம்பரம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாகவும், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில், நேற்று பிற்பகல் செம்பரம்பாக்கம் ஏரி பகுதிக்கு வருகை தந்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அங்கே ஆய்வை செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் உள்ளிட்டவை தொடர்பாக கேட்டறிந்தார்.

அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அவர் முதலில் ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது, இங்கே திறக்கப்படும் தண்ணீர் அடையாறு ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்கும் ஆகவே இந்த தண்ணீர் இன்று விடியற்காலை நேரத்தில் அங்கு வந்து விடும் என எனக்கு நன்றாகத் தெரியும், ஆகவே அங்கே இருக்கக்கூடிய முகத்துவாரம் எப்படி இருக்கிறது என்று நேற்று ஆய்வு செய்தேன் மண் மேடு எல்லாம் தூர்வாரி தூய்மை படுத்தப்பட்டு இருந்தது. அதேபோல கூவம் நதி பகுதியில் ஆய்வு செய்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் துரைமுருகன்.

தற்சமயம் நீர்திறப்பு 2,000 கன அடியாக இருக்கிறது தொடர்ச்சியாக கனமழைக்கு வாய்ப்பு இருந்தால் அனைத்து மதகுகளையும் தெரிந்துதான் ஆகவேண்டும் என தெரிவித்த அவர், அதற்கு காரணம் நீர்நிலைகளை காப்பாற்றி ஆக வேண்டும், இங்கே தப்பித்தவறி ஏதாவது சேதம் உண்டு ஆனால் மிகப்பெரிய விளைவை சந்திக்க கூடும் என தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு நீர் வீணாகிப் போகிறது என வருத்தம் இருந்தாலும் கூட பொது மக்களின் உயிர் அதை விடப் பெரியது என தெரிவித்திருக்கிறார். ஆற்றுப் பகுதியில் ஓரமாக, கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் வீடு கட்டியவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். நீர்நிலைப் பகுதிகளில் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்கக்கூடாது. என்ற உச்ச நீதிமன்றத்தின் திட்டவட்டமான முடிவின்படி செயல்பட வேண்டும், ஆனால் நாம் பகுதிகளில் அவ்வாறு நடப்பதில்லை என்று தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் மழைக் காலத்தின்போது அப்போதைய ஆட்சியாளர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பது எனக்கு தெரியாது என கிண்டல் செய்த துரைமுருகன் சென்ற ஆட்சிக்காலத்தில் 2015ஆம் ஆண்டு ஒரேயடியாக செம்பரம்பாக்கத்தில் நீர் திறக்கப்பட்டது போல இல்லாமல் தற்போது படிப்படியாக நீரை திறந்துவிட்டிருக்கிறோம்  என்று குறிப்பிட்டிருக்கிறார் துரைமுருகன்.

Exit mobile version