மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்!

0
152

மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்று முதல்வர் அறிவித்து அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போது பேருந்து பயண கட்டணம் அதிகரிக்கும் என ஒரு சில போலி தகவல்கள் வருகின்றது. அது போலியா இல்லை உண்மையானதா என்று தெரியாத பட்சத்தில் குழம்பி வருகின்றனர் மக்கள்.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமை ஏற்க போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பஸ் போக்குவரத்தை நேற்று துவக்கி வைத்துள்ளார். அது சென்னை சைதாப்பேட்டை கிண்டி கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 23 வழித்தடங்களில் புதியதாக பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.

இந்த துவக்கவிழா சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன்,” போக்குவரத்து துறையில் மொத்தம் 16, 580 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மிகவும் பல சிரமங்களுக்கு பின்னரே இந்த துறையும் இயங்கி வருகிறது என்றே சொல்லலாம். மேலும் பெண்களுக்கு இலவசம் என்று சொன்ன பிறகு ஒரு நாளில் 30 லட்சம் பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அதேபோல் இப்பொழுது எதிர்பார்த்ததை விடவும் அதிகமான பெண்கள் கூடுதலாக அரசு பேருந்தில் பயணம் செய்கின்றனர். அதனால் தமிழக அரசு 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

“அதுமட்டுமின்றி போக்குவரத்து துறை மிகவும் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இப்பொழுது இல்லை” என்று ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். மேலும் ஒரு பேருந்தை சுத்தம் செய்வதற்கு 60 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது 33 ரூபாய்க்கு கொடுத்துள்ளோம். மேலும் பழைய பஸ்களை அகற்றி விட்டு புதிதாக 2500 பஸ்கள் வாங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதால் நிறைய மக்கள் பயனடைவார்கள் என்றும் சொல்லியுள்ளார். மேலும் அவர் முகக்கவசம் மக்கள் அணியாதது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது எனவும், முக கவசத்தோடு தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் நாம் இருப்பதால் மக்கள் அதற்கு ஏற்றவாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், மேலும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விமானம் ரயில் தரை வழியாக தமிழகம் வருபவர்களை சோதித்த பின்னரே அனுமதிக்கப் படுகிறது என்றும் சொல்லியுள்ளார்.