Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு வேலை வழங்கப்படும்! உறுதியளித்த சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் நோய்தொற்று பரப்பை அதிகரிக்க தொடங்கியது தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தனர்.

அந்த விதத்தில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது முதலில் இந்த தடுப்பூசி 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் பலகட்ட பரிசோதனைக்கு பின்னரே வினியோகம் செய்யப்பட்டது.

அதேபோல 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவில்லை. இந்த மெல்ல, மெல்ல, பரிசோதனைக்குப் பிறகுதான் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.அவ்வாறு செலுத்தப்பட்ட தடுப்பூசியின் பலனாக 18 வயது முதல் 40 வயது வரையில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவது குறைந்து போனது.

அதேநேரம் குழந்தைகளுக்கு இந்த நோய் தொற்று பரவும் அதிகரிக்கத் தொடங்கியது இதனை கவனித்த மத்திய மாநில அரசுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று ஆலோசனை செய்தது.

அதோடு 12 வயது முதல் 14 வயது வரையில் இருக்கின்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தது மாநில அரசு.அதன்படி தமிழ்நாட்டில் 12 வயது முதல் 14 வயது வரை இருக்கின்ற சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் நேற்று தொடங்கி வைத்தார்கள்.

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு கோர்பே வேக்ஸ் தடுப்பூசி எழுதும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் ஆரம்பித்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் சட்டசபை உறுப்பினர்கள் வேலூர் ஜெ. கருணாநிதி ஏ எம் வி பிரபாகர் ராஜா சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றதாக தெரிகிறது.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் 21.21 லட்சம் சிறுவர்களை இலக்காகக் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்மதத்துடன் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.

பூஸ்டர் தடுப்பூசி பொருத்தவரையில் 4,03,652 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இந்த சூழ்நிலையில் 60 வயதை கடந்த இணை நோய் இல்லாதவர்களுக்கும் இன்றுமுதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என கூறியிருக்கிறார்.

அந்தவிதத்தில் 60 வயதை தாண்டிய 1,04,19000 பேர் இருக்கிறார்கள் இவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் தமிழ்நாட்டில் இதுவரையில் 8,30,870 கோவேக்ஸின் தடுப்பூசியும், 28,81,220 கோவிசில்டு தடுப்பூசியும்,21,60,000 கோர்பே வேக்ஸ் தடுப்பூசியும், கையிருப்பிலிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது அனைத்து அரசு மருத்துவர்களுக்கு மகிழ்ச்சி வழங்க கூடிய இனிப்பான செய்தி இது முதல்வரின் சமூகநீதிக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று ஆளுநரிடம் தமிழக முதலமைச்சர் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆளுநரும் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக ஒப்புதல் வழங்கியிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன். அதோடு சித்த மருத்துவ பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் உருவாவதற்கும் அவர் ஒப்புதல் வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மருத்துவத்துறையில் இருக்கின்ற காலி பணி இடங்களை கண்டறிந்து மார்ச்சு மாதம் 31 ஆம் தேதிக்கு பிறகு எம்ஆர்பி மூலமாக நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதோடு நோய்தொற்று காலகட்டத்தில் பணி புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் பணியில் நிரப்பும்போது சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு சலுகை வழங்கி முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும். நிச்சயமாக ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version