Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

கையும் களவுமாக சிக்கும் அமைச்சர்கள்! உச்சநீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!

சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் அனைவரிடமும் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த தேர்தலானது இரு மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் முதல் தேர்தல்  ஆகும் .ஆகையால் யார் இந்த தேர்தலில்  வெற்றிபெருவாரோ அவரே அதன் பின் ஆட்சி அமைக்க முடியும் என்ற கொள்கையைக் கூறி வருகின்றனர்.அதனால் தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் லஞ்சமாக பணத்தை கொடுத்து வருகின்றனர்.இதனைத்தடுக்கும் விதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அதிக அளவு பறக்கும் படையினரை நியமித்துள்ளது.

அனைத்து இடங்களிலும் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கில் வராத பணங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.இருப்பினும் பறக்கும்படயினரையே மிரட்டி முக்கிய பெரும் கட்சிகள் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.திமுக வேட்பாளருக்காக கொண்டு சென்ற பணத்தை கையும் களவுமாக பறக்கும் படையினரிடம் சிக்கியது.ஆனால் வருவாய்துறை அமைச்சர் அந்த பணத்தி திருப்பி கொடுக்கும் படி மிரட்டியதில் பறக்குபடையினர் மீண்டும் பணத்தை கொடுத்து விட்டனர்.

அதுமட்டுமின்றி நேற்று கமல்ஹாசன் தஞ்சாவூரில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற போது அவரிடமும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதற்கு தங்களை பிரச்சாரம் செய்யவிடாமல் இடையூறு செய்ததாக மநீம கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதனையெல்லாம் தடுக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு காடுமையான விதிமுறைகளை போடும்படி உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் அதிக அளவு  குற்றங்கள் நடக்கும் அதனால் இன்னும் கடுமையான விதிமுறைகளை விதிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி தேர்தல் அன்று அமைச்சர்களின் அதிகாரத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.அப்போது தான் தேர்தலின் போது நடக்கும் குற்றங்களை குறைக்க முடியும்.அதுமட்டுமின்றி தற்போது விதிக்கப்படும் விதிமுறைகளை இனி வரபோகும் தேர்தலின் போது கடைபிடிக்கலாம் எனக் கூறி உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version