டாக்டர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சந்திப்பு! நிறைவேறியதா பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை?

0
140

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து, பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்தது சேர்ந்த டிசம்பர் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி அந்த கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் நிலையில், இது காலம் கடத்தும் நடவடிக்கை என்று டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்து இருக்கின்றார்.

பாரதிய ஜனதாவுடன் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடரும் என்று அதிமுக அறிவித்திருக்கின்றது இப்பொழுது சட்டசபை தேர்தல் குறித்த பணிகள் வேகம் எடுத்து இருக்கின்ற நிலையில், பிரச்சாரத்தையும், கூட்டணி சம்பந்தமான பேச்சு வார்த்தைகளையும், அதிமுக ஆரம்பித்திருக்கின்றது.

இதனையடுத்து மருத்துவர் ராமதாஸ் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சி.வி. சண்முகம் தங்கமணி, கே.பி அன்பழகன், ஆகிய மூவரிடமும் டாக்டர் ராமதாஸ் நேரில் சந்தித்து பேசுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் தான் செல்ல இயலாது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, தங்கமணி, மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோர் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் சென்று இருக்கிறார்கள்.

ஆனாலும், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் இருந்து அவர்களுக்கு சரியான ஒத்துழைப்பு தரப்படவில்லை என்று தெரிவிக்கின்றது அதிமுக வட்டாரம்.

தங்கமணி, கூட்டணி தொடர்பாக டாக்டர் ராமதாசிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 31ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி முடிவை தெரிவிக்கின்றேன் என்று பத்து நிமிடங்களில் பேச்சுவார்த்தை முடித்துக்கொண்டார். பின்பு மாலை 6 45 மணி அளவில் இரு அமைச்சர்களும் தைலாபுரத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்கள். அதன் பிறகு அமைச்சர் சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்குச் சென்று ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக மூன்று அமைச்சர்களும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

அங்கே இருந்தபடியே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புகொண்ட அமைச்சர் தங்கமணி ,ராமதாஸ் உடனான சந்திப்பில் நடந்தவற்றை விளக்கி தெரிவித்தார். அமைதியாக கேட்டுக் கொண்ட முதலமைச்சர் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டு போனை வைத்து விட்டார் என்று தெரிவிக்கிறார்கள்.