Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்! இவர்கள் தானா?

Ministers paid tribute to Kamaraj statue by showering flowers! Are they the same?

Ministers paid tribute to Kamaraj statue by showering flowers! Are they the same?

காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்! இவர்கள் தானா?

காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று காலை  சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள இடத்தில்  அண்ணா அவர்களின் உருவ சிலை ஒன்றுள்ளது .அதற்கு கீழ் மிகப் பிரமாண்டமாக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவசிலைக்கு அருகில்  அமைச்சர்கள் மற்றும் பல தலைவர்கள் அங்கு வந்தனர்.

மேலும் அவர்கள் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.கர்மவீரர் காமராஜர் தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் பெரும் சிகரத்தை தொட்டவர்.

தனது ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் கிராமங்கள் தோறும் தொடக்கப்பள்ளி ஒன்றை தொடங்கி வைத்து அவர்களுக்காக கல்வியில் மறுமலர்ச்சியையும் உருவாக்கினார்.ஏழை மாணவர்கள் பள்ளிகளில் எளிய வகையில் கல்வி கற்பதற்கு இலவச மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தவர் காமராசர்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தினால் கல்வி வளர்ச்சிக்காக அருள் பெறும் பணிகளையும் உருவாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் விவசாயம் மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் பெரும் வளர்ச்சி அடைவதற்காக அயராது பாடுபட்டு வந்தவர் நம் கர்மவீரர் காமராஜர்.

நம் கல்விக்காக அயராது பாடுபட்ட கர்மவீரர் காமராஜருக்கு இன்று பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்த நாளை தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி வளர்ச்சி நாளாக போற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version