சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! உலமாக்களின் பிள்ளைகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 

0
251
#image_title

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! உலமாக்களின் பிள்ளைகளுக்கு அடித்தது ஜாக்பாட்! 

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட 12 புதிய அறிவிப்புகளை சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

இதே போல் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாகவும், விபத்து மரணத்துக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஒரு லட்சத்தில் இருந்து, 1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் சிறுபான்மையினர் உரிமைகள் தினத்திற்கு வழங்கப்படும் தொகை 2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார்.