Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குளிரில் மந்தமான உடலை.. படு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் புதினா இலை பானம்!!

பனி காலத்தில் உடல் மந்தம் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம் தான்.இதனால் எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும்.இந்த உடல் மந்தம் சரியாக புதினா இலை பானம் செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா இலை – 10
2)மிளகு – கால் தேக்கண்டி
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
5)உப்பு – சிட்டிகை அளவு
6)தேன் – ஒரு தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:-

படி 01:

முதலில் நீங்கள் புதினா இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

படி 02:

அடுத்து கால் தேக்கரண்டி மிளகை வாசனை வரும் அளவிற்கு வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.

படி 03:

பிறகு அதில் பத்து புதினா இலைகளை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

படி 04:

பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த புதினா இலை மற்றும் மிளகுத் தூளை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.

படி 05:

அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருகினால் சோர்வுற்ற உடல் படு சுறுசுறுப்பாக இயங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா இலை – கால் கப்
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:-

படி 01:

முதலில் புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

படி 02:

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு இதனுடன் கால் தேக்கரண்டி சீரகம் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

படி 03:

பின்னர் இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

படி 04:

பின்னர் அதில் எலுமிச்சம் பழ சாறை பிழிந்து பருகி வந்தால் உடல் சோர்வு நீங்கும்.

Exit mobile version