Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!!

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!!

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது, 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள், அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டுள்ளன. எனினும், இந்த தொடர் தாக்குதல்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கட்டடங்கள் மட்டுமே சேதமடைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில், அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள ஒரு ‘டிவி’ சேனல் அலுவலகமும் சேதமடைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு, அமெரிக்கா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள யாவோரிவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது ரஷியாவின் கூட்டமைப்பு  ஏவுகணை வீசி தாக்குதலை நடத்தியதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இனியும் இந்த தாக்குதல் நடைபெறாமல் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version