கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், ஏமன் அரசுக்கும் சண்டை நடைபெற்று வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தரும் நாடாக ஈரான் விளங்குகிறது. அந்நாட்டின் ஆதரவுடன் ஏமன் நாட்டின் சில பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போர் எதுவும் நடக்காமல் இருக்கிறது. தெற்கு சவுதி அரேபியாவை இலக்காக வைத்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது பாலிஸ்டிக் ஏவுகணை.