Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிக்குச் சென்ற மாணவியை காணவில்லை? துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்!!

Missing a schoolgirl? Panicking parents!!

Missing a schoolgirl? Panicking parents!!

பள்ளிக்குச் சென்ற மாணவியை காணவில்லை? துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்!!

ஆம்பூர் ரெட்டி தோப்பு முதல் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு தம்பதிகள். இவர்கள் சென்னையில் தங்கி கொண்டு வேலை பார்த்து வருகின்றனர். கணவன் டைலர் பணியிலும் மற்றும் மனைவி பியூட்டி பார்லர் நிலையத்திலும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள்.இவர்களின்  பெற்றோர் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அதனால் இவர்கள் இருவரும் ஆம்பூர் ரெட்டி தோப்பில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.மகள் அப்பள்ளியில் பிளஸ் டூ படித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று பள்ளிக்குச் சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. வெகு நேரமாகியும் மாணவி வராததால் அங்கும் இங்குமாக தேடி அலைந்தார் மாணவியின் பாட்டி  ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அவரது பாட்டி அச்சமுற்று பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஏற்கனவே அப்பகுதியில் ஒரு வாலிபர் என் மகளை அவ்வப்போது சில சில்மிஷம் செய்து வந்தான்.பின் அவனை மிகக் கடுமையாக கண்டித்து எச்சரித்து விட்டோம். இந்நிலையில் அந்த  வாலிபர் தான் என் மகளிடம்  திருமண ஆசை காட்டி மைனரான பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக மாணவியின் தாயார் கூறியுள்ளார்.இதைதொடர்ந்து காவல்துறையினர் காணாமல் போன பிரிவில் வழக்கு பதிவு செய்து அந்த மாணவியை தேடி வருகின்றனர்.

Exit mobile version