9000 கோடி ஊழல் செய்த கிங்ஃபிஷர் ஓனரின் வழக்கு தொடர்பான ஆவணங்களை காணவில்லையாம்!

0
112

கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த விஜய் மல்லையாவின் வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் உள்ள கோப்புகளில் இருந்து காணாமல் போய்விட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் லலித் மற்றும் அசோக் பூஷன் ஆகஸ்டு 20-ம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.

ஜூலை 14ஆம் தேதி வெளியான தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த மனுவின் விசாரணையில், பலமுறை சொல்லியும் வங்கியில் வாங்கிய 9000 கோடி நிலுவைத் தொகையினைத் திருப்பித் தர மறுத்ததால் அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற அமர்வில் அந்த வழக்கு தொடர்புடைய விண்ணப்பத்திற்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கும்போது, சில ஆவணங்கள் நீதிமன்ற கோப்புகளில் இருந்து காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வழக்கு தொடர்புடைய நபர்கள் புதிய நகல்களை தாக்கல் செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டித்தது.

கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலிடப்படாத வங்கிகளுக்கு
9000 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், அவமதிப்பு வழக்கில் மே மாதம் 2017 ல் தண்டனை வழங்கப்பட்டது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்த விஜய் மல்லையாவிடம் ஜூன் 19 அன்று உச்சநீதிமன்றம் விளக்கத்தினை அளிக்குமாறு கேட்டது.

நீதிபதிகள் லலித் மற்றும் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் படி மூன்று ஆண்டுகளாக மறு ஆய்வு மனுவினைக் கையாண்ட அதிகாரிகளின் விவரங்களைப் பதிவு செய்யுமாறு கூறியிருந்தது.

மேலும் எஸ்பிஐ வங்கி தலைமையிலான மற்ற வங்கிகளில் கூட்டமைப்பானது, விஜய் மல்லையாவுக்கு எதிராக தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் 2017 ஆம் ஆண்டு அந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. பிறகு டால் ஜியோவில் இருந்து 40 மில்லியன் டாலர்களை தனது வாரிசுகளின் கணக்குகளுக்கு விஜய் மல்லையா ஏமாற்றியதாக அந்த வங்கிகள் குற்றம்சாட்டி இருந்தன. மேலும், இந்த பரிமாற்றம் செய்யப்பட்ட பணமானது வங்கிகளுக்கு கடனைத் திருப்பித்தர பயன்படுத்த வில்லை எனவும், மேலும் இந்தச் செயலானது நீதிமன்றத்தின் உத்தரவினை மீறுவதாகும் என வங்கிகள் குற்றம்சாட்டி இருந்தன.

இதன் பிறகு மூன்று வருட காலம் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கானது தற்போது எடுத்துக் கொண்ட நிலையில் வழக்கிற்கான ஆவணங்கள் திருடு போனதால் நீதிமன்றத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.